பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள இரவின் நிழல் படத்தின் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பார்த்திபனுடன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிதா சாகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட NonLinear திரைப்படமாகும். இந்த முறையில் இந்தியாவிலேயே முதன்முதலில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இரவின் நிழல் படம் உள்ளது.
இதையும் படிங்க - முதன்மை கதாப்பாத்திரத்தில் அம்மு அபிராமி நடிக்கும் 'குதூகலம்'
இந்தப் படத்தை இந்த மாதம் 24-ம்தேதியே ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால், படத்தின் வெளியீட்டை ஜூலைக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - வைரலாகும் விக்கி – நயன்தாரா ஹனிமூன் ஃபோட்டோஸ்…
‘இரவின் நிழல்’ – Nonlinear சிங்கிள் ஷாட் படமாக இருப்பதால், இந்தப் படம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது.
இதையும் படிங்க - ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு
50 வயது நபர் ஒருவர் தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைத் திரும்பிப் பார்ப்பதுதான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. ‘இரவின் நிழல்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.
75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் இரவின் நிழல் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டியிருப்பதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Parthiban, AR Rahman