• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒத்த செருப்பு இந்தியில் ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?

ஒத்த செருப்பு இந்தியில் ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

இடைப்பட்ட காலத்தில் இந்தி ரீமேக்குக்கான ஆரம்பகட்ட பணிகளை முடித்து படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் பார்த்திபன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பார்த்திபன் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்ட படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இதில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம் சில விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார் பார்த்திபன். படத்துக்குப் பொருத்தமான இந்திப் பெயரை கூறுங்கள் என சில மாதங்கள் முன்பு ட்விட்டர் வழியாக கேட்டிருந்தார். ரசிகர்கள் ஆவலுடன் பெயர்களை பரிந்துரைத்தனர். பார்த்திபனும் மகிழ்ந்து போய் நன்றி கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடைப்பட்ட காலத்தில் இந்தி ரீமேக்குக்கான ஆரம்பகட்ட பணிகளை முடித்து படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் பார்த்திபன். ஒத்த செருப்பு ஒரேயொரு நடிகர் மட்டும் இடம்பெறும் படைப்பு. சவாலானதும்கூட. அந்த ஒற்றை வேடத்தை இந்தியில் யார் செய்கிறார்கள் என்பதை அறிய பலரும் ஆவல் கொண்டிருந்தனர். இப்போது ரகசியம் உடைபட்டுள்ளது. அபிஷேக் பச்சன் ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் நடிக்க, பார்த்திபன் இயக்கி வருகிறார்

Also read... இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பரை நேரில் சென்று பாராட்டிய மம்முட்டி!

அபிஷேக் பச்சன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்றொரு அவப்பெயர் அவருக்குண்டு. ஒத்த செருப்பு உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்க வேண்டிய படம். பார்த்திபன் இந்த சவாலை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: