இரவின் நிழல் இசை வெளியீட்டு விழாவில் வேதனையுடன் பேசிய பார்த்திபன்
இரவின் நிழல் இசை வெளியீட்டு விழாவில் வேதனையுடன் பேசிய பார்த்திபன்
பார்த்திபன்
ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள் என்று பார்த்திபன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசை கொண்டாடும் விழாவிற்கு வருகை தர தமிழகத்தில் நான்கு நண்பர்கள் கிடைக்கவில்லை என பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசை பயண கொண்டாட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், சரத்குமார், ராதிகா மற்றும் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பார்த்திபன் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள். இருந்தபோதிலும் பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இருந்தாலும் இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார் என பெருமிதம் கொண்டார்.
அதேபோல் அபிஷேக் பச்சன் பேசும்போது, பார்த்திபன் இயக்கத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அவர் மிகச் சிறந்த படைப்பாளி என பாராட்டினார். அதேபோல் ஏ.ஆர் ரகுமான் பேசும்பொழுது பார்த்திபன் 20 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் ஒரு கதை கூறினார். ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு பிறகும் பல கதைகளை கூறினார். ஆனால் இரவின் நிழல் படத்தின் கதை சொல்லி முடிப்பதற்குள்ளே இணைந்து பணியாற்றலாம் என கூறினேன். இது ஒரு லட்சிய (Ambitious Project) திரைப்படம். என்றே ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இரவின் நிழல் படத்தின் பாடலை அபிஷேக் பச்சன் வெளியிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இரவின் நிழல் படத்தில் இடம்பெறும் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் மேடையில் வாசித்தார். அதைத்தவிர ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்தை கொண்டாடும் விதத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்வேதா மேனன், ஜேம்ஸ் வசந்தன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட பலர் அவரின் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.