பரியேறும் பெருமாள் படத்துக்கு புதுச்சேரி அரசு விருது!

news18
Updated: September 11, 2019, 11:47 AM IST
பரியேறும் பெருமாள் படத்துக்கு புதுச்சேரி அரசு விருது!
பரியேறும் பெருமாள் படத்தின் போஸ்டர்
news18
Updated: September 11, 2019, 11:47 AM IST
புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்தியத் திரைப்பட விழாவும், 2018-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் இந்த விழா வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நாட்களுக்கு நடைபெறுகிறது.

அந்தவகையில் வரும் 13-ம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் விழாவில் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் இந்தத் திரைப்படத்தையும் இலவசமாக பார்வையிடலாம் என்று புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் 36 ஆண்டுகளாக தொடர்ந்து சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அந்தத் திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

வீடியோ பார்க்க: அடுத்து என்ன செய்ய போகிறார் ரஞ்சித்?

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...