ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆப் ப்ரொமோஷனால் பண மோசடி குற்றச்சாட்டு... கோபி-சுதாகர் சொல்வதென்ன?

ஆப் ப்ரொமோஷனால் பண மோசடி குற்றச்சாட்டு... கோபி-சுதாகர் சொல்வதென்ன?

பரிதாபங்கள் கோபி - சுதாகர்

பரிதாபங்கள் கோபி - சுதாகர்

சூப்பர் பேக்கர் ஆப் ப்ரொமோஷனுக்காக தங்களை அணுகியதாகவும், மற்ற வணிகங்களைப் போலவே அவர்கள் அதை விளம்பரப்படுத்தினாலும் அதன் டெவலப்பர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  'பரிதாபங்கள்’ என்ற யூ-ட்யூப் சேனலின் கோபி, சுதாகர் இருவரும் சப்ஸ்கிரைபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கு அவர்கள் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

  யூ-ட்யூபில் பிரபலமான கோபி, சுதாகர் இருவரும் 'கோசு' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் 2018-ஆம் ஆண்டு ‘பரிதாபங்கள்’ எனும் தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக அறிவித்தனர். அந்தப் படத்திற்கு 'ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா' என்று பெயரிடப்பட்டது.

  இந்தப் படத்திற்கு க்ரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டினர். இந்நிலையில் சமீபத்தில், கோபி சுதாகர் இருவரும் தங்கள் சேனல் வீடியோக்களில் சூப்பர் பேக்கர் என்ற ஆப்பை ப்ரோமோட் செய்து, அதன் மூலம் பல கோடி வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

  ' isDesktop="true" id="538741" youtubeid="5u8BU8b-EPs" category="cinema">

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது குறித்து விளக்கமளித்துள்ள கோபி, சுதாகர் இருவரும், அந்த சூப்பர் பேக்கர் ஆப் ப்ரொமோஷனுக்காக தங்களை அணுகியதாகவும், மற்ற வணிகங்களைப் போலவே அவர்கள் அதை விளம்பரப்படுத்தினாலும் அதன் டெவலப்பர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினர். அதோடு கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாகத்தான் தாங்கள் தயாரிக்கும் படம் தாமதமாவதாகவும் விரைவில், படத்தை தொடங்குவோம் என்றும் டீசரும் வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாமதத்திற்கும், குறிப்பிட்ட செயலியின் மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: News On Instagram