மண் மணம் மாறா நல் மனம் - பரவை முனியம்மாவை நினைத்து வருந்தும் விவேக்

மண் மணம் மாறா நல் மனம் - பரவை முனியம்மாவை நினைத்து வருந்தும் விவேக்
நடிகர் விவேக்
  • Share this:
பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று காலமானார்

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமான இவர், தூள் என்ற படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்த அவர், 83 வயதான நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.


இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவருடன் இணைந்து நடித்த நடிகர் விவேக் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



மேலும் படிக்க: 'மிஸ்ஸிங் மை பூ'... ஆறுதல் மற்றும் விழிப்புணர்வு சொன்ன விஷ்ணு விஷால்



First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading