ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பராசக்தி' படத்தை பார்த்தபோது இப்படித்தான் தோன்றியது.. மனம் திறந்த வெற்றிமாறன்!

'பராசக்தி' படத்தை பார்த்தபோது இப்படித்தான் தோன்றியது.. மனம் திறந்த வெற்றிமாறன்!

பராசக்தி திரைப்படம் இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பராசக்தி திரைப்படம் இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கதை வசனத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் 1952ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் திரையுலகை திருப்பிப் போட்ட திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளன.

இந்த நிலையில் பராசக்தி படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சென்னையில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் அதற்கு நேற்று விழா எடுத்தது. அதில், அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க நினைக்கும் இயக்குநர்களுக்கு பராசக்தி எப்போதும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும். அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி மக்களுக்கு பெரிய பலனைக் கொடுக்காது என அம்பேத்கர் கூறியுள்ளார். பராசக்தி படத்தை நான் பார்த்தபோது இதுதான் எனக்குத் தோன்றியது.

இதையும் படிங்க; முன்னணி தளத்திற்கு வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன் - உறுதிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

சமூக பிரச்னைகளை சினிமாவில் பேசுவதற்கான களத்தை உருவாக்கிய படங்களில் முக்கியமானது பராசக்தி. இன்றும் சமூகத்துடன் பொருந்திப் போகிறது. இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் அதன் தாக்கம் இருக்கும். அதுதான் பராசக்தி திரைப்படத்தின் பலம்” என்று தெரிவித்தார்.

பராசக்தி படம் மூலமாக கற்றுக்கொள்ளவும், வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ளவும் நிறைய கருத்துகள் உள்ளன என்று குறிப்பிட்ட வெற்றிமாறன், 70 வருடம் கழித்தும் பராசக்தி திரைப்படத்திற்கு விழா எடுக்கும் அளவுக்கு இருக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது என்று பேசினார்.

First published:

Tags: Director vetrimaran