Exclusive | பாண்டிராஜ் தான் ‘தளபதி 65’ இயக்குநரா? - விஜய் தரப்பு விளக்கம்!

Exclusive | பாண்டிராஜ் தான் ‘தளபதி 65’ இயக்குநரா? - விஜய் தரப்பு விளக்கம்!
பாண்டிராஜ் | விஜய்
  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு.


இதுஒருபுறமிருக்க மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து விஜய்யை இயக்கும் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதற்கு தீனி போடும் விதமாக கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை என குடும்பக் கதையை மையப்படுத்திய இரண்டு படங்களைக் கொடுத்து வெற்றி பெற்ற இயக்குநர் பாண்டிராஜ், விஜய்யை வைத்து தளபதி 65 படத்தை இயக்க இருப்பதாகவும், இவர்கள் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விஜய் தரப்பில் நாம் விசாரித்த போது, தளபதி 65 படத்தை பாண்டிராஜ் இயக்கவில்லை என்றும், அதுகுறித்து வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர 3 மாதங்களுக்கு முன்பே படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கும் நிலையில், விரைவில் தளபதி 65 பட இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் படிக்க: மீசை, தாடியில்லாமல் விஜய் - வைரலாகும் மாஸ்டர் லுக்!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading