Home /News /entertainment /

வாரிசு படப்பிடிப்பில் என்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திட்டாங்க - குமுறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்

வாரிசு படப்பிடிப்பில் என்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திட்டாங்க - குமுறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்

வாரிசு - பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்

வாரிசு - பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்

ஃபோட்டோல பாத்து, நேர்ல பாத்து கடைசில நான் செட்டாக மாட்டேன்னா அதுக்கு நானா பொறுப்பு? படப்பிடிப்பு தளத்துல எனக்கு நேர்ந்த அவமானம் இது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  நடிகர் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பில் தனக்கு அவமானம் நேர்ந்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவிச்சந்திரன் சமீபத்தில் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

  தளபதி விஜய் தற்போது வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படும் இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். அதோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

  இதுவரை 'வாரிசு' செட்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து, விஜய் படங்களிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதிகம் கசிந்த புகைப்படங்கள் கொண்ட படமாக இப்படம் மாறியுள்ளது. சமீபத்தில் கூட விஜய்யும், ராஷ்மிகாவும் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் லீக்கானது. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

  இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

  இந்நிலையில் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தனக்கு அவமானம் நேர்ந்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார். அந்த சீரியலில் மீனா என்ற கேரக்டருக்கு அப்பாவாக ஜானார்த்தனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவிச்சந்திரன் சமீபத்தில் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில், “வாரிசு படத்தின் அசோசியேட் இயக்குநர் ஒருவர் ஃபோன் செய்து, ஒரு கேரக்டரில் நடிக்க ஃபோட்டோ அனுப்புங்கன்னு சொன்னாரு. அனுப்புனேன், பிறகு செல்ஃபி அனுப்ப சொன்னாங்க, அதையும் அனுப்புனேன். அடுத்த நாள் நேர்ல வர சொல்லி இயக்குநர், உதவி இயக்குநர்கள் எல்லாரும் நேர்ல பாத்தாங்க. ஒரு 20 ஃபோட்டோ எடுத்தாங்க.

  பிறகு மாலை 6 மணிக்கு ஃபோன் பண்ணி, நாளைக்கு காலைல ஷூட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க. கடைசி நேரத்துல சொல்றாங்களேன்னு பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர் கிட்ட சூழ்நிலையை சொன்னேன். பெரிய நடிகரோட படம், 7 நாள் கேட்டுருக்காங்க. அதுல நடிச்சா, என்னோட, கரியர் உயரும்ன்னு சொன்னேன். சரி போய்ட்டு வாங்கன்னு சீரியல் இயக்குநர் அனுப்பி வச்சார்.

  அடுத்த நாள் அந்த இடத்துக்கு போய், மேக்கப் போட்டு, காஸ்ட்யூம் மாத்தி, டிபன் சாப்ட்டாச்சு. இயக்குநர் பாத்துட்டு கேரவன்ல இருக்க சொன்னாரு. கொஞ்ச நேரம் கழிச்சு, மேனேஜர் வந்து, சார் நீங்க ரொம்ப ரிச்சா தெரியுறீங்க, இந்த கேரக்டருக்கு ரொம்ப பாவப்பட்ட தோற்றத்துல உள்ளவர் தான் வேணும். நீங்க அதுக்கு செட்டாக மாட்டீங்கன்னு உங்கள கிளம்ப சொல்லிட்டாரு இயக்குநர்ன்னு சொல்றாரு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

  இதுல என் தப்பு என்ன இருக்கு? என்ன லுக்குன்னு சொல்லிட்டா மேக்கப் மேன் மாத்தி தரப்போறாரு. கேமரா முன்னாடி எனக்கு நடிக்க வரலைன்னு திருப்பி அனுப்புனா கூட பரவால, நான் சந்தோஷப்படுவேன். ஃபோட்டோல பாத்து, நேர்ல பாத்து கடைசில நான் செட்டாக மாட்டேன்னா அதுக்கு நானா பொறுப்பு? படப்பிடிப்பு தளத்துல எனக்கு நேர்ந்த அவமானம் இது. மசாலா கம்பெனி நடத்தி, 40 வயதுசுல நடிக்க வந்து இன்னைக்கு 57 வயசுல நடிச்சிட்டு இருக்க ஒருத்தன வர சொல்லி, திருப்பி அனுப்புனா அவனுக்கு எவ்வளவு வலிக்கும்ன்னு அங்க இருந்த யாரும் உணரலை. இது விஜய் சாருக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா இப்படி நடக்க விட்டிருக்க மாட்டாரு” என தன் மனக் கஷ்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay

  அடுத்த செய்தி