சின்னத்திரை நாயகன் கவின் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு, பின்னர் வெள்ளித்திரையிலும் தன் காலடி பதித்துள்ளார். சமீபத்தில் வெளியான லிஃப்ட் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் கவின். லிஃப்ட் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது மற்றும் கவினின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் கவின், அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் ஊர்க்குருவி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைத்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பேனரில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் ரவுடி பிக்சர்சின் அடுத்த படம் தான் ஊர்க்குருவி. இந்த படத்தின் நாயகனாக கவின் நடிக்கிறார் என்று தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க ஒரு சின்னத்திரை நடிகை நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.
also read : செம்ம மாடர்ன் உடையில் லண்டனை சுற்றி வரும் குஷ்பு - புகைப்படங்கள்
கவினின் நாயகியாக நடிப்பதற்கு காவ்யா அறிவுமணி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகப்போவதாக செய்தி வெளியானது. ஆனால், காவ்யாவும் சரி, சீரியல் தரப்பிலும் சரி இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது என்றும், அதற்காக சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, கவின் நடிக்கும் ஊர்க்குருவி படிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக காவ்யா அறிவுமணி நடிக்கப் போகிறார் என்றும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமான செய்தி இதுவரை வெளியாகவில்லை.
also read : நடிகை சமந்தாவின் ஆன்மிக சுற்றுலா புகைப்படங்கள்..
முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. சீரியலில் குடும்பப்பாங்கான பாத்திரத்தில் நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களைக் கிறங்கடித்து வந்துள்ளார்.
ஆனால், ஏற்கனவே முல்லை பாத்திரத்தில் நடித்து வந்து சித்ரா இறப்பிலிருந்து மீள முடியாமல், முல்லையாக வேறு எந்த நடிகையையுமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, முல்லையாகவே வாழ்ந்திருந்தார் சித்ரா. காவ்யா அறிவுமணி முல்லை பாத்திரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், இவர் முல்லையாக எப்படி இருப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும்பியது. ஆனால், அவ்வளவு எதிர்பார்ப்பையும் மீறி, முல்லை பாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி, புதிய முல்லையாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர் காவ்யா அறிவுமணி.
தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து காவ்யா அறிவுமணி விலகிப் போவதால், மீண்டும் முல்லை பாத்திரத்துக்கு எந்த நடிகை தேர்வு செய்யப்படுவார் அல்லது முல்லை பாத்திரம் என்ன ஆகும் என்ற பல்வேறு கேள்விகள் பார்வையாளர்கள் மனதில் எழும்பியுள்ளது.
விரைவில், காவ்யா அறிவுமணி ஊர்க்குருவி படத்தில், கவின் ஜோடியாக நடிக்க இருப்பதைப் பற்றிய செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.