• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சோஷியல் மீடியாவில் தந்தையை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!

சோஷியல் மீடியாவில் தந்தையை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வரும் நிலையில், தனது தந்தையை முதன் முதலாக இன்ஸ்டாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அந்த குடும்பத்தின் கடைக்குட்டியாக கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளவர் இவர். அண்ணன் தம்பி பாசம் மற்றும் கூட்டு குடும்பம் உள்ளிட்ட யதார்த்த வாழ்க்கை முறையை ரசிகர்களின் கண்முன்னே காட்டுவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மிக அதிகம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப சகோதரர்களின் தாயான லட்சுமி அம்மாவின் இறப்பு காட்சிகள் கடந்த வார எபிசோட்கள் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. குடும்பத்தை பற்றி யோசிக்காமல் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை கோவிலில் வைத்து காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணனை நினைத்து குடும்பமே அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்ந்தது.

இதனை தொடர்ந்து கண்ணின் தாயான லட்சுமி, அவன் செய்த காரியத்தை நினைத்து நினைத்து மனம் வருந்தி சாப்பிடாமலே யாரிடமும் பேசாமல் உடல்நலம் பாதிக்கப்படுகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர் சிகிச்சைக்கு பின், வீடு திரும்புகிறார். வீடு திரும்பிய பின்னர் இயல்பாக அனைவரிடமும் பேசி கொண்டிருக்கும் லட்சுமி, இரவு தூங்கி கொண்டிருக்கும் போதே உயிரை விட்டு விடுகிறார்.

வெளியூருக்கு சென்றிருக்கும் கண்ணனுக்காக குடும்ப உறுப்பினர்கள் உடலை எடுக்காமல் காத்திருந்த போதும், ஊர் பெரியவர்களின் வற்புறுத்தலால் கண்ணன் வருவதற்கு முன்பே வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஊர் திரும்பியதும் செய்தியை கேட்டு சுடுகாட்டிற்கு ஓடும் கண்ணனால் கடைசி வரை தாயின் முகத்தை பார்க்க முடியாமல் போகிறது. இதை நினைத்து கதறி கொண்டே இருக்கும் கண்ணன், மறுநாள் சென்று தாயின் அஸ்திக்கு சில சடங்குகளை செய்து விட்டு மொட்டை அடிப்பது போல காட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 1 வாரம் ஓடிய இந்த சோக எபிசோட்கள் ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தது. கண்ணனாக நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் இந்த காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல வீட்டில் இருந்த வரை அண்ணன்கள் மற்றும் அண்ணிகளால் செல்லமாக பார்த்து கொள்வது போல காட்டப்பட்ட போதும் வெகுளித்தன்மான மற்றும் துடுக்கான நடிப்பால் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

Also read... தவறு ஆடையில் இல்லை கண்களில்தான் உள்ளது - வைரலாகும் டிடி-யின் இன்ஸ்டா பதிவு!

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகர் சரவண விக்ரம் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். மேலும் திருச்செந்தூரில் பள்ளி மற்றும் கலோரி படிப்பை முடித்தவர். நடிப்பு மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக பெற்றோரின் சம்மதத்துடன் சென்னை வந்து பல ஷாட்ஃபிலிம்களில் நடித்தார். பின்னர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம், பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமடைந்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)


3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வரும் நிலையில், தனது தந்தையை முதன் முதலாக இன்ஸ்டாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். தந்தையுடன் தான் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இருக்கிறார். இவரது தந்தை பிரபல மினரல் கம்பெனி ஒன்றில் ஜெனரல் மேனேஜராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தனது நிஜ தந்தையுடன் நடிகர் சரவண விக்ரம் இருக்கும் இந்த போஸ்ட்டை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: