பரத் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

பரத் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

கே.எஸ்.ரவிக்குமார், பரத் மற்றும் படக்குழு

பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி நடிக்கிறார்.

  • Share this:
    காளிதாஸ் படத்தை அடுத்து இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் ‘ராதே’ படத்தில் நடித்துள்ளார் பரத். இந்தப் படம் 2021-ம் ஆண்டு ரம்ஜானுக்கு திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் பரத் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

    அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கும் இந்தப் படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த ராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவாளராகவும், கலைவாணன் எடிட்டராகவும் பணிபுரிகிறார்கள். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தொடங்க உள்ளது.



    பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்துக்கு வந்த காவ்யா அறிவுமணிக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Sheik Hanifah
    First published: