ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கும் பிரபல நடிகரின் படம்… பிரச்னை இதுதானா?

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கும் பிரபல நடிகரின் படம்… பிரச்னை இதுதானா?

வாரிசு - ஆதிபுருஷ் - துணிவு

வாரிசு - ஆதிபுருஷ் - துணிவு

சினிமா ரசிகர்கள் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத பொங்கலாக எதிர்வரும் பொங்கல் அமையவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொங்கல் ரேஸில் இருந்து முன்னணி நடிகரின் படம் பின் வாங்கியுள்ளது. அதுகுறித்த சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

  சினிமா ரசிகர்கள் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத பொங்கலாக எதிர்வரும் பொங்கல் அமையவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் – விஜய் படங்கள் பொங்கலுக்கு களம் இறக்கப்படவுள்ளன.

  சோஷியல் மீடியா, ரசிகச் சண்டையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் இப்போதைய சூழலில், இவ்விரு படங்களின் வெளியீடு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  'கேவலமா இருக்கீங்க'.. உருவத்தை கேலி செய்த கும்பல்.. பாசிட்டிவாக பேசி கைதட்டல் வாங்கிய பிரதீப்!

  இதற்கிடையே, பான் இந்தியா ஹீரோவாகா உயர்ந்து நிற்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் படமும் பொங்கல் ரேஸில் இணைந்திருந்தது. ராமாயணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில், பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்திருந்தார்.

  ' isDesktop="true" id="827925" youtubeid="HwdJj8lhOo8" category="cinema">

  பொங்கல் வெளியீடு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ட்ரால் மெட்டீரியலாக மாறிப் போனது. மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகளால் இந்த படத்தை நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்தனர்.

  குழந்தைகள் பார்க்கும் சேனல்களின் லோகோவுடன் ஆதிபுரூஷ் டீசர் காட்சிகளை இணைத்து வந்த மீம்ஸ்கள் வரவேற்பை பெற்றிருந்தன. இவை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கேலி கிண்டல்கள் படக்குழுவை அதிர்ச்சி அடையச் செய்தன. குறிப்பாக இயக்குனர் ஓம் ராவத், இந்த ட்ரால்களால் அதிகம் பாதிக்கப்பட்டார்.

  அஜித் ரசிகர்களுக்காக இதோ துணிவு அப்டேட்… சூப்பர் ஸ்பீடில் டப்பிங் பணிகள்!

  இந்த சூழலில் ஆதிபுரூஷ் படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து ஒதுங்கிக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மோசமான கிராஃபிக்ஸை தூக்கி விட்டு, இன்னும் குவாலிட்டியாக படத்தை கொண்டு வர படக்குழுவினர் முயற்சித்து வருகிறார்களாம். இதனால்தான் படம் பொங்கலுக்கு வராது என்று கூறப்படுகிறது.

  இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு, பொம்மை கார்ட்டூனுக்கு இவ்வளவு செலவா என்று மீம்ஸ்கள் வெளிவந்திருந்தன. 2023 ஏப்ரலில் படத்தை வெளியிட டெட்லைன் வைத்து, படக்குழுவினர் தற்போது பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith, Actor prabhas, Actor Vijay, Pongal