ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு… வியப்பை ஏற்படுத்தும் காட்சிகள்

விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு… வியப்பை ஏற்படுத்தும் காட்சிகள்

Vikram Making Video : உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

Vikram Making Video : உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

Vikram Making Video : உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார் கமல்.

படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கமல் ஹாசன்.

‘சிறந்த பான் – இந்தியா படமாக பொன்னியின் செல்வன் அமையும்’ – த்ரிஷா

அந்த உற்சாகத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார், சூர்யாவுக்கு 40 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச், துணை இயக்குநர்களுக்கு பைக் ஆகியவற்றை பரிசளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும், பேக் ரவுண்ட் மியூஸிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

நேற்று முன்தினம் விக்ரம் படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை வெளியிடப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நேற்று வெளியிட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும்’ – ஜெயமோகன்

விக்ரம் மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றன. ஓடிடி தளத்தில் வெளியான பின்னரும், திரையரங்குகளில் விக்ரம் படத்திற்கு வரவேற்பு இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Vikram