முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 18+ காமெடி.. ஜாம்பி ஜானர்.. “பல்லு படாம பாத்துக்க..” படம் எப்படி இருக்கு? மூவி ரிவ்யூ!

18+ காமெடி.. ஜாம்பி ஜானர்.. “பல்லு படாம பாத்துக்க..” படம் எப்படி இருக்கு? மூவி ரிவ்யூ!

பல்லு படாம பாத்துக்க திரைப்படம்

பல்லு படாம பாத்துக்க திரைப்படம்

‘ஷான் ஆஃப் தி டெட்’, ‘வீ ஆர் தி மில்லர்ஸ்’ பாணி முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட 18+ காமெடி படம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெம்பிள் மங்கீஸ் புகழ் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பல்லு படாம பாத்துக்க’ திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக இன்று வெளியானது.

இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், சஞ்சிதா செஷ்டி, ஜகன், ஷாரா, அப்துல் ஆகியோர் நடித்துள்ளனர். வெவ்வேறு காரணங்களுக்காக வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த 6 பேர் கேரளாவில் உள்ள அமானுஷ்ய வனப்பகுதிக்கு தற்கொலை செய்துகொள்வதற்காக வருகின்றனர்.

ஆனால் அங்கு சாவை விட மோசமான ஒன்று அவர்களை துறத்துக்கிறது. ஜாம்பிகள். ஜாம்பி கடித்தால் சாகாமல் அவர்களும் ஜாம்பி ஆகிவிடுவார்கள். அதைத்தான் படத்தின் டைட்டிலாக வைத்துள்ளார் இயக்குநர். இந்த படம் த்ரில்லர் படம் பாணியில் இல்லாமல், ‘ஷான் ஆஃப் தி டெட்’, ‘வீ ஆர் தி மில்லர்ஸ்’ பாணி முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட 18+ காமெடி படம். படத்தின் நீளம் 2 மணி நேரம் இருப்பதும் படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

திரைப்படங்கள், விளம்பர படங்கள், டிஸ்கவரி சேனல் என பாகுபாடின்றி அனைத்து ஃபர்னிச்சர்களும் பதம் பார்க்கப்பட்டன. அரசியல் சார்ந்த நையாண்டிகளை எப்படி சென்சாரை தாண்டி இயக்குநர் கடத்தி வந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. அதே நேரத்தில், சென்சார் சர்டிபிகேட் வாங்க படக்குழு டெல்லி வரை சென்று போராடியது இங்கு குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகள் முன் எடுக்கப்பட்ட படம் என்பது ஆங்காங்கே நமக்கு அப்பட்டமாக தெரிவது தவிர்க்க முடியவில்லை என்றாலும் அனைத்து ரெபெரென்ஸ்களுமே இன்று பார்க்கும் போதும் வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.

ஒரு சில இடங்களில் காமெடியை உள்வாங்கி புரிந்து சிரிப்பு வருவதற்குள் அடுத்த சீனே வந்துவடுகிறது. இரண்டாம் பாதியில் ஹிட்லர் வில்லான அறிமுகபடுத்தப்படுகிறார். இங்குள்ள அரசியல்வாதிகளை பயன்படுத்த முடியாது என்பதால் நேர்த்தியாக அவர் எடுத்த இந்த முடிவே படத்தில் சற்று தொய்வை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. ஹிட்லர் வரும் சீன்கள் ஆடியன்ஸிடம் பெரிதளவில் கனெக்ட் ஆகவில்லை.

18+ படம் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்க்கலாம். இவையெல்லாம் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வீக்கெண்டை நண்பர்களுடன் ஒரு அடெல்ட் காமெடி பிலிம் பார்த்து சிரித்துவிட்டு வர வேண்டும் என நினைப்பவர்கள் யோசிக்காமல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

First published:

Tags: Movie review, Tamil movies