ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க விரும்பும் பாகிஸ்தான் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க விரும்பும் பாகிஸ்தான் ரஜினிகாந்த்!

பாகிஸ்தான் ரசிகர் - ரஜினிகாந்த்

பாகிஸ்தான் ரசிகர் - ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான் தனது ஒரே லட்சியம் என்று வீடியோவில் ரெஹ்மத் கெஸ்கோரி கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தோற்றத்தைப் போன்ற பாகிஸ்தான் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியிருக்கிறார். அவரது ஸ்டைல் பல ரசிகர்களால் பின்பற்றப்படுகிறது. தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எல்லைகளைக் கடந்து ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகாத பகுதிகளில் கூட அவருக்கு இருக்கும் தீவிர ரசிகர்களை இதன் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

  ஓய்வுபெற்ற பாகிஸ்தான் அரசு ஊழியரான ரெஹ்மத் கெஸ்கோரிக்கும், ரஜினிகாந்துக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவரது நடை, உடல் மொழி, சிகை அலங்காரம் மற்றும் துப்பாக்கியை கையாளும் விதம் என எல்லாமே ரஜினி ஸ்டைலை ஒத்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான் தனது ஒரே லட்சியம் என்று வீடியோவில் ரெஹ்மத் கெஸ்கோரி கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இன்று மாலை வெளியாகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

  இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது, 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அதிகபட்சமாக ஓரிரு மாதங்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அவர் நடிக்கும் 'தலைவர் 170' மற்றும் 'தலைவர் 171' படங்களின் பூஜை நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth