இணைய பிரபலமும், கவர்ச்சி நடிகையுமான மியா கலிஃபாவின் டிக் டாக் கணக்கை 3-வது முறையாக பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. இதற்கு அவர் கொடுத்துள்ள பதிலடி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
டிக் டாக் கணக்கை பாகிஸ்தான் அரசு முடக்கியதை ட்விட்டரில் பதிவிட்ட மியா, "எனது டிக்டாக் கணக்கை நாட்டிலிருந்து தடை செய்ததற்காக பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுங்கள். பாசிசத்தைத் தவிர்க்க விரும்பும் எனது பாகிஸ்தான் ரசிகர்களுக்காக, எனது அனைத்து டிக்டாக் வீடியோகளையும் இப்போதிலிருந்து ட்விட்டரில் பதிவிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் எந்தவொரு அறிவிப்பும் விடுக்காமல் மியாவின் டிக்டாக் கணக்கை தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்தும் தகவல் தொடர்பு ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த காலங்களிலும் இதுபோல் இரண்டு முறை மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கை தடை செய்து பின்னர் அதனை விடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. "ஒழுக்கக்கேடான மற்றும் நெறிமுறையற்ற" வீடியோக்கள் தடை செய்யப்படுவதாக அதற்கு விளக்கமும் அளித்திருந்தது.
டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதை மியாவின் ரசிகர் ஒருவர் தான் அவருக்கு ட்விட்டர் மூலம் அறிவித்தார். அதன்பிறகே இதுபற்றி அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து ரசிகரின் செய்தியை குறிப்பிட்ட மியாவை டிக்டாக்கில் 22.2 மில்லியன் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mia Khalifa