பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக ஐ.நாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!

இந்திய ராணுவத்தின் செயலுக்கு அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, ’ஜெய்ஹிந்த் இந்திய விமானப் படை’ என்று பதிவிட்டிருந்தார்.

news18
Updated: March 3, 2019, 5:46 PM IST
பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக ஐ.நாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!
பிரியங்கா சோப்ரா
news18
Updated: March 3, 2019, 5:46 PM IST
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை யுனிசெஃப்(UNICEF) தூதர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாமின்மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.

இந்திய ராணுவத்தின் செயலுக்கு அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, ’ஜெய்ஹிந்த் இந்திய விமானப் படை’ என்று பதிவிட்டிருந்தார். முன்னதாக, 2016-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பான யுனிசெஃப்-ன் தூதராக ப்ரியங்கா சோப்ரா இருந்துவருகிறார்.

யுனிசெஃப்-ன் தூதராக இருந்து கொண்டு ஒரு நாடு எல்லை மீறி தாக்குதல் நடத்தியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, அவரை அந்த பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்துதான் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில் இதுவரையில் 2,200 பேர்வரை கையெழுத்திட்டுள்ளனர்.

Also see:

First published: March 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...