Sarpatta parambarai Review : பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் எப்படி இருக்கிறது?

பா.ரஞ்சித் - ஆர்யா

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிடி-யில் வெளிவந்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 • Share this:
  தமிழகத்தின் வட சென்னையில் 1970-களில் பிரபலமாக இருந்த இரண்டு குத்துச்சண்டை அணிகளுக்கு இடையிலான பகையை மையப்படுத்திய கதையில் சாமானியனின் எழுச்சியை பேசியிருக்கிறார் பா. ரஞ்சித்.

  வழக்கமான ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான டெம்ப்ளேட்டில் இருந்து விலகி மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதியுள்ள ரஞ்சித் அத்தோடு 70-களின் வடசென்னையை கண்முன் கொண்டு வந்து படமாக்கத்திலும் அசத்தி இருக்கிறார்.

  நிஜ குத்துச்சண்டை வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரடியான சிக்ஸ் பேக் உடற்கட்டோடு களமிறங்கியிருக்கும் ஆர்யா, தன் கேரியரின் சிறந்த பெர்ஃபார்மென்ஸை கொடுத்து தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார். நான் யார் என நிரூபிக்க வேண்டிய நேரம் இது என படத்தில் தான் பேசும் வசனத்திற்கு நிஜத்திலும் நியாயம் செய்திருக்கிறார் ஆர்யா.

  Also Read : பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான 2வது காரணம் இதுதான்-வீடியோ வெளியிட்ட ஜெனிபர்

  டான்சிங் ரோஸ், daddy, ரங்கன் மாஸ்டர், மாரியம்மா என படம் முழுவதும் பல அழுத்தமான துணை கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருப்பதோடு நடிகர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

  கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றாலும் கொஞ்சமும் தொய்வில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதி இருப்பது ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் ரஞ்சித்தை கொண்டாட வைக்கிறது. மேலும் 70-களில் நடக்கும் கதை என்பதால் எமர்ஜென்சி, மிசா, ஆட்சி கலைப்பு என அன்றைய நடப்பு அரசியலையும் கதையோடு இணைத்து பதிவு செய்திருப்பது கூடுதல் வியப்பை ஏற்படுத்துகிறது.

  பாடல்கள் அதிகம் இல்லை என்றாலும் பின்னணி இசையின் மூலமே காட்சிகளின் வீரியத்தை பார்வையாளனுக்கு கடத்தி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

  Also Read : 18 வருடம் கழித்து இணையும் பாலா-சூர்யா கூட்டணி!

  தொடர்ந்து தன்னுடைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை அழுத்தமாக பேசிவரும் ரஞ்சித் இந்தப் படத்திலும் கதைக்கு ஏற்ற விதத்தில் தன்னுடைய அரசியலை முன்னிறுத்தி இருக்கிறார். அதேபோல் தொடர்ந்து தன்னுடைய படங்களில் எதார்த்தமான காதல் காட்சிகளை மிக இயல்பாக பதிவு செய்து வரும் ரஞ்சித் இந்த படத்திலும் கணவன் மனைவிக்கு இடையிலான மென் உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

  மொத்தத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிங்கில் களமிறங்கியிருக்கும் ரஞ்சித், நாக் அவுட் பன்ச் கொடுத்து வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: