Home /News /entertainment /

ஆதிவாசி தலைவரின் கதையை இந்தியில் படமாக்கும் இரஞ்சித்

ஆதிவாசி தலைவரின் கதையை இந்தியில் படமாக்கும் இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்

ஆதிவாசிகளின் தலைவரான பிர்சாவின் கதையை அறம் படத்தை இயக்கிய கோபி நாயினாரும் திரைக்கதையாக்கி வைத்து இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இரஞ்சித் முந்திக்கொண்டு பிர்சாவின் கதையை படமாக்குகிறார்.

  • News18
  • Last Updated :
இந்தியில் தனது முதல் படத்தை இயக்குகிறார் இரஞ்சித். படத்திற்கு பிர்சா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜார்கண்ட் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகளின் விடுதலைக்காகவும் போராடியவர் பிர்சா முண்டா. இவரை குறித்து இரஞ்சித் இந்தியில் படம் இயக்கப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதற்காக பிர்சா முண்டா வின் வாழ்க்கை வரலாறை சொல்லும் நாவலின் உரிமையையும் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் நமா பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக சார்பட்டா பரம்பரை வெளியானது. அதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை இயக்கினார். அது விரைவில் வெளிவர உள்ளது. அதை எடுத்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் அவரது அடுத்த படம் இந்தியில் தயாராவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறை சொல்லும் திரைப்படத்தை அவர் இயக்குகிறார். படத்திற்கு பிர்சா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளின் தலைவரான பிர்சாவின் கதையை அறம் படத்தை இயக்கிய கோபி நாயினாரும் திரைக்கதையாக்கி வைத்து இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இரஞ்சித் முந்திக்கொண்டு பிர்சாவின் கதையை படமாக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவர உள்ளன. நமா பிக்சர்ஸ் சார்பில் ஷாரின் மந்ரி, கிஷோர் அரோரா ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். இரஞ்சித்தின் இந்தி அறிமுகம் மிகப்பெரிய தாக்கத்தை அங்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

Also read... சிவகார்த்திகேயனின் டான் படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமைகள் விற்கப்பட்டன

காரணம் பிர்சா முண்டா வட இந்தியாவில் மிகவும் பிரபலமான தலைவர். தங்களது கொள்கைக்கு உட்பட்டவராக இல்லாமல் இருந்தாலும் அமித்ஷா அவரது சிலைக்கு மாலை அணிவித்துதான் அங்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் .அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தவர் பிர்சா. அவரது கதையை இரஞ்சித் படமாக்கும்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாக வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pa. ranjith

அடுத்த செய்தி