Home /News /entertainment /

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான ரைட்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான ரைட்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரைட்டர்

ரைட்டர்

ரஞ்சித் படங்கள் என்றால் சந்தோஷ் நாராயணன் இசை என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இப்போது அந்த இடத்தை கோவிந்த் வசந்தா எடுத்துக் கொண்டிருக்கிறார்.

படங்கள் இயக்குவதுடன் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்களை தயாரிக்கவும் செய்கிறார் .ரஞ்சித். அவரது தயாரிப்பில் அடுத்து ரைட்டர் திரைப்படம் வெளியாகிறது.

கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் சினிமா இன்னொரு தளத்துக்குள் நுழைந்திருக்கிறது. காலில் ஷுவுடன் படுத்துறங்குகிற நாயகர்கள் முழுமையாக தமிழ் சினிமாவிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்விடங்கள் எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் திரைப்படங்களில் காட்சிகளாகின்றன. லிங்கா படத்திற்குப் பிறகு ரஜினி, ரஞ்சித்தை நோக்கி வந்ததே இதுபோன்ற நுட்பமான சித்தரிப்புகளை எதிர்பார்த்தே. அந்த பயணம் அண்ணாத்த போன்ற படங்களில் சென்று முடிந்தது எதிர்பாராத விபத்து.

ரைட்டர் காவல்நிலையங்களில் வழக்குகளை பதிவு செய்யும் எழுத்தரைப் பற்றியது. இந்த கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு, யு.எம்.ராவ் இணை தயாரிப்பு. படத்தை ப்ராங்கிளின் ஜேக்கப் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

ரஞ்சித் படங்கள் என்றால் சந்தோஷ் நாராயணன் இசை என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இப்போது அந்த இடத்தை கோவிந்த் வசந்தா எடுத்துக் கொண்டிருக்கிறார். 96 படத்துக்கு இசையமைத்தவர் இவர். ரஞ்சித், விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதை அறிவித்ததுடன், ரைட்டர் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். டிசம்பர் 24-ஆம் தேதி ரைட்டர் திரையரங்குகளில் வெளியாகிறது.

யோகி பாபு நடித்திருக்கும் பொம்மை நாயகி திரைப்படம் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து  வெளியாகிறது. இது தவிர மேலும் இரு படங்கள் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உள்ளன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Pa.rajnith

அடுத்த செய்தி