ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்… விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு…

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்… விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு…

தங்கலான் படத்தில் விக்ரம்

தங்கலான் படத்தில் விக்ரம்

தங்கலான் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி ஆகியோர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் அப்டேட் வெளிவந்து ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.

    இந்தப் படம் கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம்,  பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தங்க வயலின் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு தங்கலான் என பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ளது.

    ஷாரூக்கானை தொடர்ந்து சல்மான் கானை இயக்கப் போகிறாரா அட்லீ? புதிய தகவலால் பரபரப்பு

    தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.

    ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற்று வந்த ஷூட்டிங் தீபாவளிக்கு முன்பாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் மதுரைக்கு விரைந்துள்ளனர். இங்கு சில வாரங்களுக்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தங்கலான் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி ஆகியோர் விக்ரமுடன் நடிக்கின்றனர்.

    ‘இதயத்தின் இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து’ – அதிதி ராவுக்காக உருகும் சித்தார்த்…

    விக்ரம் நடிப்பில் கடைசியாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளிவந்தன. இவ்விரு படங்களுமே சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை. இவற்றில் கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பலவீனமான திரைக்கதை, தேவையற்ற காட்சிகளால் கோப்ரா படம் ரசிகர்களை ஈர்க்காமல் சென்றது. இருப்பினும், பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியால் விக்ரம் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

    இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் கம்பீரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் வசூலை ரூ. 500 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    அடுத்ததாக, வருடக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுதம் மேனன் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர் படமான துருவ நட்சத்திரத்தின் வருகையை, சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram