முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லுக்கே வேற லெவல்.. கவனிக்க வைத்த விக்ரமின் 'தங்கலான்' பட அறிமுகம்.!

லுக்கே வேற லெவல்.. கவனிக்க வைத்த விக்ரமின் 'தங்கலான்' பட அறிமுகம்.!

பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம்

பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம்

கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.

இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம்,  பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்திற்கான தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தங்க வயலின் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு தங்கலான் என பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் இயக்குநர் ஷங்கர்… ஒரே நாளில் படங்கள் ரிலீஸ்?

தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை ஃபேன் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.

விக்ரம் நடிப்பில் கடைசியாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளிவந்தன. இவ்விரு படங்களுமே சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை. இவற்றில் கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

பலவீனமான திரைக்கதை, தேவையற்ற காட்சிகளால் கோப்ரா படம் ரசிகர்களை ஈர்க்காமல் சென்றது. இருப்பினும், பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியால் விக்ரம் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் கம்பீரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் வசூலை ரூ. 500 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் அடுத்தடுத்து வீடியோ!

அடுத்ததாக, வருடக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுதம் மேனன் இயக்கியுள்ள ஆக்சன் த்ரில்லர் படமான துருவ நட்சத்திரத்தின் வருகையை, சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

First published:

Tags: Actor Vikram, Pa. ranjith