பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நாளை முதல் கடப்பாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த திரைப்படம் கோலார் தங்க வயலின் வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. எனவே, அதற்கு ஏற்ற வகையில் படப்பிடிப்பு தளத்தையும், பகுதியையும் தயார் செய்துள்ளனர்.
''மேடம் வேண்டாம்.. லைலான்னு கூப்பிடுங்க'' - கலகலன்னு பேசிய மித்ரன்.. விழுந்து சிரித்த லைலா!
நாளை தொடங்கும் முதல் கட்டப்பட படிப்பு 10 நாட்கள் நடைபெறும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக நடிகர் விக்ரம் தன்னை தயார் படுத்தி வந்தார். இதற்கிடையே படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் கால்ஷூட் பிரச்னையால் அவர் விலகுவதாகவும் அவருக்கு பதிலாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கடந்த வாரம் சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
'’காலில் விழுந்து வாய்ப்பு பெற்றேன்’’ - பாக்யராஜிடம் உதவி இயக்குநர் ஆனது குறித்து பாண்டியராஜ்!
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vikram, Pa. ranjith