இயக்குநர் ப.ரஞ்சித் - நடிகர் விக்ரம் இணையும் படத்திற்கு மைதானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் கடைசியாக 'மஹான்' படத்தில் நடித்தார். இந்த ஆக்ஷன் படம், பார்வையாளர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. விக்ரம் அடுத்ததாக தனது 61-வது படத்திற்கு, இயக்குநர் பா.ரஞ்சித்துடன் கைகோர்க்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
அந்தப் படத்தில் விக்ரம் பல்துறை வேடத்தில் நடிக்கிறார். எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை கையில் எடுக்கும் ரஞ்சித், இந்தப் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய பாடி-பில்டிங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு படமாக இதனை இயக்கவிருக்கிறாராம். படத்தில் விளையாட்டு மைதானம் முக்கியத்துவம் பெறுவதால், படத்திற்கு 'மைதானம்' என்ற தலைப்பை படக்குழுவினர் வைத்துள்ளனர்.
விக்ரம் மைதானம் படத்திற்காக சில பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். அதன்
படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விக்ரமின் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த சிறப்பான தினத்தில் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இரவில் பாலக்காடு கோயில் விசிட்... கவனம் பெறும் அஜித் புகைப்படங்கள்!
ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து இயக்கிய ரஞ்சித், இரண்டாவது விளையாட்டு படமாக 'சியான் 61' படத்தை இயக்குவதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
Vijay Rajinikanth: ரஜினி சார் கூட படம் பண்ண விஜய் சார் தான் காரணம் - மனம் திறந்த நெல்சன்!
ம்றுபுறம் விக்ரம் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.