விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கும் இரஞ்சித்...?

தளபதி விஜய்

இவரைப் போல் சுசீந்திரன், அமீர், சசிகுமார் உள்பட ஒரு டஜன் முன்னணி பிரபலங்கள் விஜய்யை வைத்து படம் இயக்கும் ஆசையில் உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது முந்தைய தலைமுறை இயக்குனர்களின் லட்சியமாக இருந்தது. இப்போது ரஜினி இடத்தில் விஜய். முன்னணி நடிகர்களை அதிகம் சட்டைசெய்யாத மிஷ்கினுக்கும் விஜய்யை இயக்க ஆசை உள்ளது. 

சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட, அதனை வெளிப்படுத்தினார். பௌத்தம் பின்னணியில் மிஷ்கின் கமலுக்காக ஒரு கதை தயார் செய்தார். வழக்கம்போல கடைசி நேரத்தில் கமலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. நேரம் அமையும் போது, அந்த கதையில் விஜய் நடிக்க சம்மதித்தால் அதை இயக்குவேன் என்று மிஷ்கின் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரைப் போல் சுசீந்திரன், அமீர், சசிகுமார் உள்பட ஒரு டஜன் முன்னணி பிரபலங்கள் விஜய்யை வைத்து படம் இயக்கும் ஆசையில் உள்ளனர். அவர்களை முந்திக் கொண்டு விஜய் படத்தை இரஞ்சித் இயக்குவார் என தெரிகிறது.

Also read... சி.வி.குமார், ஞானவேல்ராஜா இணைந்து தயாரிக்கும் புதிய படம்!

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கப் போவதாக இரஞ்சித் தெரிவித்துள்ளார். வழக்கமான சூப்பர் ஹீரோ கதை போல் கற்பனையாக இல்லாமல், கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள தொடர்பினை வைத்து இந்தக் கதையை அவர் எழுதியுள்ளார்

தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கிவரும் இரஞ்சித், அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்குவதாக அவரே தெரிவித்துள்ளார். அப்படியானால் விக்ரம் படம்...?

இன்னும் ஓரிரு நாளில் யாரை இரஞ்சித் முதலில் இயக்குகிறார் என்பது தெரிந்துவிடும்.
Published by:Vinothini Aandisamy
First published: