Home /News /entertainment /

தலைவிரித்தாடும் பிரிவினைவாதம்... கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்புவோம் - பா.ரஞ்சித்

தலைவிரித்தாடும் பிரிவினைவாதம்... கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்புவோம் - பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

கலைகளின் மூலமாக மக்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை பேச வேண்டும். நீலம் பண்பாட்டு மையம் மக்களிடம் தொடர்ந்து சமூகத்தில் இருக்கும் முரண்கள் குறித்து பேசி வருகிறது.

    பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் மக்கள் மத்தியில் கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்ப வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை ஐ.சி.எப். அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி காலங்களில் நாடகங்களை நான் நடத்தியுள்ளேன். சினிமாவை போன்றே எனக்கு நாடகங்களையும் பிடிக்கும். நாட்டில் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் மனித நேயத்தையும் சமத்துவத்தையும் கலைகளின் வாயிலாக பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சினிமா, நாடகங்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என என்னென்ன கலைகள் உள்ளதோ அனைத்தின் மூலமாகவும் அன்பை திளைக்க செய்ய வேண்டும்.

    பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!

    கலைகளின் மூலமாக மக்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை பேச வேண்டும். நீலம் பண்பாட்டு மையம் மக்களிடம் தொடர்ந்து சமூகத்தில் இருக்கும் முரண்கள் குறித்து பேசி வருகிறது. குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. மனித மாண்பை மீட்டெடுக்க நாம் தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.

    அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித், மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். அரசியல் களத்தில் எப்போதும் தனது கருத்தை தைரியமாக பேசி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: P.ranjith, Pa. ranjith

    அடுத்த செய்தி