Home /News /entertainment /

காதலுக்கு பின் இருக்கும் சமூக சிக்கல்களை நட்சத்திரம் நகர்கிறது பேசும் - பா.ரஞ்சித்

காதலுக்கு பின் இருக்கும் சமூக சிக்கல்களை நட்சத்திரம் நகர்கிறது பேசும் - பா.ரஞ்சித்

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காதலுக்கு பின் இருக்கும் சமூக சிக்கல்களை பேசி உள்ளேன் என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காதலுக்கு பின் இருக்கும் சமூக சிக்கல்களை பேசி உள்ளேன் என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்தப் படத்திற்கு தென்மா இசையமைத்திருக்கிறார். நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பட குழுவினரை தவிர தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், காதலுக்கு பின் இருக்கும் சமூக சிக்கல்களை நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் பேசியுள்ளேன். இந்த சமூகம் காதலுக்குப் பின்னாடி உருவாக்கி உருவாக்கி வைத்திருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். அதேபோல் கபாலி திரைப்படம் வெளியான சமயத்தில் அனைவரும் நன்றாக இருப்பதாக கூறினர். ஆனால் சினிமா துறையில் இருந்தவர்கள் படம் நன்றாக இல்லை என விமர்சித்தினர். அது தனக்கு குழப்பத்தை உருவாக்கியதாகவும், வலியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். ஆனால் தனக்கு தன்னம்பிக்கை கொடுத்து, அந்த படத்தின் வசூலை காண்பித்து தேற்றியவர் கலைப்புலி எஸ்.தாணு. அதேபோல் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா அட்டக்கத்தி திரைப்படத்தை வெளியிடவில்லை என்றால், தன்னுடைய திரைப்பயணம் கடினமாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.

மேலும் நான் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்த சமயத்தில் இவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவர்களை அழைத்தேன் என்று தெரிவித்தார். அதேபோல் சென்னை-28 திரைப்படத்தில் வேலை செய்தது முக்கியமானதாக நினைக்கிறேன்.  எனக்கான பாதையை அந்த திரைப்படத்தில் பணியாற்றியது உருவாக்கியது எனவும் கூறினார். அத்துடன் தன்னுடைய Free of Mind-ஐ திறந்து விட்டவர் வெங்கட் பிரபு எனவும் பா.ரஞ்சித் நெகிழ்ச்சி அடைந்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், அட்டகத்தி படத்தைப் பார்த்தபோது இது பெரிய தொடக்கமாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் இத்தனை காலம் திரைப்படங்களில் பேச தயங்கிய, பேச தவிர்த்த விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது. இந்த கதைகளும் காலம் தாண்டி வருகிறது என நினைக்கிறேன். ஆனால் பா.ரஞ்சித் மூலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறினார். அட்டகத்தி போல, இந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படமும் புதிய ட்ரெண்டை உருவாக்கும் என தோன்றுகிறது என வெற்றிமாறன் தெரிவித்தார்.

அதில் உண்மையில்லை... த்ரிஷா குறித்த வதந்திக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் வெங்கட் பிரபு பேசுகையில் சென்னை-28 திரைப்படத்திற்கு முன்பு இருந்து ரஞ்சித்தை எனக்கு தெரியும். Story Board பணிக்காக சந்தித்தேன். அவர் முதலில் இயக்குநர் லிங்குசாமியிடம் உதவியாளராக சேர்த்து விடுமாறுதான் கூறினார். இறுதியில் என்னுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கோவா திரைப்படத்தில் பெரும்பாலான வசனங்களை ரஞ்சித் தான் எழுதினார். தற்போது குருவை மிஞ்சிய சிஷ்யனாக பா.ரஞ்சித் உள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தென்மா இசையில் உருவான நட்சத்திரம் நகர்கிறது பாடல்களை வெளியிட்டனர். மேலும் தன்னுடைய தாய் மற்றும் குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார் பா.ரஞ்சித்.
Published by:Shalini C
First published:

Tags: Pa. ranjith

அடுத்த செய்தி