ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sarpatta: பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரையை’ பெரும் தொகைக்கு வாங்கிய அமேசான்!

Sarpatta: பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரையை’ பெரும் தொகைக்கு வாங்கிய அமேசான்!

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

எண்பதுகளில் பிரபலமாக இருந்த இரு குத்துச் சண்டை அணிகளைப் பற்றிய திரைப்படம் இது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தை மிகப்பெரிய தொகைக்கு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் வாங்கியுள்ளது. திரையரங்குகளுக்குப் பதில், நேரடியாக ஓடிடியில் இப்படம் வெளியாகிறது.

கபாலி, காலா படங்களுக்குப் பிறகு ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை தான் கதைக்களம். எண்பதுகளில் பிரபலமாக இருந்த இரு குத்துச் சண்டை அணிகளைப் பற்றிய திரைப்படம் இது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் வழிவழியாக குத்துச் சண்டையில் போட்டியிடுகின்றன. இதன் பின்னணில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸைத் தொடர்ந்து அவரது மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள், திரைத்துறையினர் என அனைவரும் சார்பட்டா பரம்பரையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கபாலி, காலா பட்டியலில் விடுபட்டு போனதாக நினைக்க வேண்டாம். இவை இரண்டும் ரஜினி நடித்தது. அவரது மாஸ் இமேஜுக்கு ஏற்ப எடுக்கப்பட்டவை. அந்தவகையில் சார்பட்டாவை ரஞ்சித் பாணியின் மூன்றாவது படம் என்பதே சரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சார்பட்டாவில் ஆர்யா பாக்ஸிங் வீரராக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன். ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்திருக்கிறது.

சார்பட்டா பரம்பரையை நேரடியாக ஓடிடியில் வெளியிட கடும் போட்டி நிலவியது. இதில் அமேசான் பிரைம் அதிகத் தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளது. பெரிய திரையில் சார்பட்டா பரம்பரையை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமே.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Arya, Pa. ranjith