Sarpatta Characters: பா.ரஞ்சித்தின் ‘சர்பட்டா’ கதாப்பாத்திரங்கள் அறிமுகம்!

Sarpatta Characters: பா.ரஞ்சித்தின் ‘சர்பட்டா’ கதாப்பாத்திரங்கள் அறிமுகம்!

சர்பட்டா ஆர்யா

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'சர்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா நடிக்கும் கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • Share this:
    இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'சர்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா நடிக்கும் கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரஜினியின் ’காலா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘சர்பட்டா பரம்பரை’. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் கதையான சர்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.



    இந்நிலையில் சர்பட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ரஞ்சித். அதன்படி ஆர்யா இடம் பெற்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆர்யாவின் இந்த லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.





    நடிகர்கள் ராணா, கிருஷ்ணா, பரத், நடிகை டாப்ஸி, இயக்குநர் விஜய் சந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் ’சர்பட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் படக்குழுவினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து படத்தின் மற்ற கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஆர்யா தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    அதையடுத்து சர்பட்டா படத்தில் நடிக்கும் மற்ற கதாப்பாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: