முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முடிவுக்கு வந்த வெற்றிக்கூட்டணி - பா.ரஞ்சித் & சந்தோஷ் நாராயணன் கூட்டணி முறிவு!

முடிவுக்கு வந்த வெற்றிக்கூட்டணி - பா.ரஞ்சித் & சந்தோஷ் நாராயணன் கூட்டணி முறிவு!

பா.ரஞ்சித் & சந்தோஷ் நாராயணன்

பா.ரஞ்சித் & சந்தோஷ் நாராயணன்

ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் திரையிசையின் வெற்றிக் கூட்டணியாக கொண்டாடப்படும் பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் கூட்டணி முறிவுக்கு வந்திருப்பது திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீன தமிழ் சினிமாவின் கருப்பொருளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் பா. ரஞ்சித். அதேபோல் தமிழ் திரையிசையில் கானாவையும் மேற்கத்திய இசையையும் ஒன்றிணைத்து புது வடிவத்தை பிரபலப்படுத்தியவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 2012ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம்தான் இவர்கள் இருவருக்குமே முதல் படம். முதல் படத்திலேயே இசையில் சந்தோஷ் நாராயணனும் இயக்கத்தில் பா.ரஞ்சித்தும் முத்திரை பதித்ததோடு யார் இந்த கூட்டணி என எல்லோரையும் வியப்புடன்

திரும்பிப் பார்க்க வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் இணையும் வாய்ப்பை பெற்ற பா. ரஞ்சித் அந்த படத்துக்காக உச்ச இசையமைப்பாளருடன் இணைவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ஆஸ்தான இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கே அந்த வாய்ப்பை வழங்கிய ரஞ்சித், எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அந்தவகையில் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான். இதில் கபாலி, காலா போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் கூட பின்னணி இசையும் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த அளவு பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி என்பது

ஒரு வெற்றிக் கூட்டணியாக உலா வந்தது.

ஆனால் தற்போது சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசை அமைத்த எஞ்சாயி எஞ்சாமி பாடலின் மூலம் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிரபல ராப் பாடகர் அறிவுடன் இணைந்து எஞ்சாயி எஞ்சாமி பாடலை தீ எழுதி பாடியிருந்தாலும் அப்பாடலின் விளம்பரத்திலும் வெற்றியிலும் அறிவு ஓரம் கட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also read... இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த பிறகே நகைச்சுவை வேடங்கள் - வடிவேலு!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பா. ரஞ்சித் டிவீட் செய்தது மேலும் பரபரப்பை கூட்டியது. இதன் காரணமாக பா. ரஞ்சித் அடுத்து இயக்கும் நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தில் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை என்றும் வேறொரு இசையமைப்பாளரை தேடி வருவதாகவும் படக்குழு கூறியுள்ளது.

அதே சமயம் நட்சத்திரங்கள் நகர்கிறது படம் குறுகிய கால படமாக உருவாகுவதாகவும் அதனால் தனது வழக்கமான கூட்டணியில் இருந்து விலகி முற்றிலும் புதுமுகங்களையும் புதிய தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகம் செய்ய பா. ரஞ்சித் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் எனும் வெற்றிக்கூட்டணி பிரிந்ததில் இசை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Music director santhosh narayanan, Pa. ranjith