ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்கிறது. ரைட்டர் படத்தைத் தொடர்ந்து அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு J.பேபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் படங்களை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ், அடுத்து J.பேபி என்ற படத்தை தயாரிக்கிறது. ஊர்வசி, தினேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் மாரி என்பவர் படத்தை எழுதி இயக்குகிறார். ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த சந்தோஷ் நாராயணன் இப்போது இரஞ்சித் படங்களில் இடம்பெறுவதில்லை. இந்தப் படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸுடன் கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயருக்கு கீழே, பேபிஸ் டே அவுட் என டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, ஊர்வசியின் ஒருநாள் வாழ்க்கையை இந்தப் படம் சொல்ல வாய்ப்புள்ளது.
அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!
இந்தப் புதிய படத்துக்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். சண்முகம் வேலுசாமி எடிட்டிங் செய்கிறார். கலை இயக்கம் ராமு தங்கராஜ். பாடல்களை கபிலன், உமாதேவி, விவேக் ஆகியோர் எழுதுகிறார்கள், தயாரிப்பு ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா மற்றும் அதிதீ ஆனந்த். இரஞ்சித்தின் வழக்கமான படங்கள் போன்று இதுவும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைச் சொல்லும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.