Home /News /entertainment /

பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகிவிட்டது - பா.ரஞ்சித்

பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகிவிட்டது - பா.ரஞ்சித்

பெரியார் சிலை | இயக்குநர் பா.ரஞ்சித்

பெரியார் சிலை | இயக்குநர் பா.ரஞ்சித்

பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகிவிட்டது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சியினர் மத்தியிலும், பெரியார் கழக தொண்டர்களிடையேயும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக பாஜக தவிர்த்து, பாமக தலைவர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது கண்டனக் குரலை பதிவு செய்திருக்கும் நிலையில் சமூகவலைதளங்களிலும் பெரியார் பேசுபொருளானார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்திக்கொள்கிறார்கள்! விழிப்படைவோம்” என்று கூறியுள்ளார்.



    இதனிடையே பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் தானாக வந்து காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Pa.rajnith, Periyar Statue

    அடுத்த செய்தி