Home /News /entertainment /

பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்…

பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்…

ரங்க ராட்டினம் பாடலுக்கான போஸ்டர்

ரங்க ராட்டினம் பாடலுக்கான போஸ்டர்

அறிவு எழுதியுள்ள இந்த பாடலை எம்.எஸ். கிருஷ்ணா, சங்கீதா சந்தோஷம், கவிதாகோபி, கார்த்திக் மாணிக்க வாசகம் உள்ளிட்டோர் பாடியுள்ளார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திலிருந்து முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

    சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களை தவிர்த்து ஹரிகிருஷ்ணன், வினோத், சுபத்ரா, ராபர்ட், சபீர் உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த படத்தின் போஸ்டர்கள் வானவில்லை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

    ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்டை தெரிவித்த ரஜினி!

    நட்சத்திரம் நகர்கிறது படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில் படத்திலிருந்து முதல் பாடலாக ரங்க ராட்டினம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.



    அறிவு எழுதியுள்ள இந்த பாடலை எம்.எஸ். கிருஷ்ணா, சங்கீதா சந்தோஷம், கவிதாகோபி, கார்த்திக் மாணிக்க வாசகம் உள்ளிட்டோர் பாடியுள்ளார்கள்.

    பாடலலைப் பார்க்க...



    மிக குறுகிய காலத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் அவரது 61வது படத்தை பா. ரஞ்சித் இயக்க உள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Pa. ranjith

    அடுத்த செய்தி