Home /News /entertainment /

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

பா.ரஞ்சித் காதலை மையமாக வைத்து இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் காதலின் பல்வேறு கோணத்தை படமாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பார்வையை பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.



பார்ப்போரை பொறாமைப்பட வைக்கும் விஜயகுமார் மகள்கள்... வனிதா விஜயகுமார் மட்டும் மிஸ்ஸிங்!

காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய முதல் படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணன் உடன் கூட்டணி அமைத்து வந்தார். அவரின் இசை ரஞ்சித்தின் திரைக்கதைக்கு உறுதுணையாக இருப்பதாக பல முறை பாராட்டப்பட்டது. இந்த நிலையில் முதன் முறையாக தென்மாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பா.ரஞ்சித்.

 
Published by:Shalini C
First published:

Tags: Pa.rajnith, Tamil Cinema

அடுத்த செய்தி