Home /News /entertainment /

Pa Ranjith: அட்டக்கத்தி தினேஷுடன் மூன்றாவது முறை இணையும் பா.ரஞ்சித்!

Pa Ranjith: அட்டக்கத்தி தினேஷுடன் மூன்றாவது முறை இணையும் பா.ரஞ்சித்!

பா ரஞ்சித் - தினேஷ்

பா ரஞ்சித் - தினேஷ்

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தினை ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அதில் தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

    இயக்குநர் பா.ரஞ்சித் மூன்றாம் முறையாக நடிகர் தினேஷுடன் இணைந்துள்ளார்.

    தினேஷ் நடித்த 'அட்டகத்தி' படத்தின் மூலம் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமானார். இது ஹீரோவான தினேஷுக்கும், இயக்குநரான ரஞ்சித்திற்கும் முதல் படமாக அமைந்தது. ரோம்-காம் படமான இது பாக்ஸ் ஆபிஸில் அற்புதங்களை செய்ததோடு, விமர்சகர்களிடமிருந்து பரவலான பாராட்டை பெற்றது. அதன்பிறகு ரஞ்சித்தும், தினேஷும் தனித்தனியாக பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

    இதற்கிடையே ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தினை ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அதில் தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் மூன்றாவது முறை சேர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தை தயாரிக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே ரஞ்சித் அடுத்ததாக, ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற ரொமாண்டிக் படத்தை இயக்கவிருக்கிறார். இதில் அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Pa. ranjith

    அடுத்த செய்தி