• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பா.இரஞ்சித்தின் புதிய படம் - சூப்பர் அப்டேட்...!

பா.இரஞ்சித்தின் புதிய படம் - சூப்பர் அப்டேட்...!

பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர். படப்பிடிப்பும் சில வாரங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவி இயக்குனர் இயக்க உள்ளார். 

படங்கள் இயக்குவதுடன் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்களை தயாரிக்கவும் செய்கிறார் இரஞ்சித். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு படங்கள் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்டவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சார்பட்டா பரம்பரையும் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷனே தயாரித்திருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தையும் இரஞ்சித்தே தயாரிக்க உள்ளார்

இந்நிலையில் தனது இணை இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், பலூன் பிக்சர்ஸுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார். நகைச்சுவை கலந்த வாழ்வியலை சொல்லும் படமாக இது இருக்கும் என அறிவித்துள்ளனர்.

Also read... சிவகார்த்திகேயன் இரு வேடங்களில் நடிக்கும் சிங்கப்பாதை...!

படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர். படப்பிடிப்பும் சில வாரங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: