ராஜ ராஜன் குறித்து கூறிய கருத்து உண்மைதான்; விளைவுகளை சந்திக்க தயார் - பா.ரஞ்சித்

தன்னுடைய பேச்சு மற்றவர்களை கோபப்படுத்துகிறது என்றால் தவறு தன்னிடமில்லை எனவும் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்

Yuvaraj V | news18
Updated: July 26, 2019, 12:41 PM IST
ராஜ ராஜன் குறித்து கூறிய கருத்து உண்மைதான்; விளைவுகளை சந்திக்க தயார் - பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்
Yuvaraj V | news18
Updated: July 26, 2019, 12:41 PM IST
ராஜ ராஜன் குறித்து தான் கூறிய கருத்துக்கள் உண்மையானது தான் என்றும், அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக உள்ளதாகவும் ரஞ்சித் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜ ராஜ சோழன் ஆண்ட காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தான் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.


இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், ராஜ ராஜ சோழன் பற்றி தான் பேசிய ஒரே காரணத்திற்காக மட்டுமே பலருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறினார்.

ராஜ ராஜன் உயிரோடு இருந்திருந்தால் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு தன்னை உரையாட அழைத்திருப்பார் எனவும் ரஞ்சித் பேசினார்.

மேலும், ராஜ ராஜன் குறித்து தான் கூறிய கருத்துக்கள் உண்மையானது தான் என்றும், அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக உள்ளதாகவும் ரஞ்சித் பேசினார்.

Loading...

எந்தப் பிரச்னையாக இருந்தாலும், திறந்த மனதோடு பேச தாம் தயாராக இருப்பதாக கூறிய பா.ரஞ்சித், தன்னுடைய பேச்சு மொழி மற்றவர்களை கோபப்படுத்துகிறது என்றால், தவறு அவர்களிடமே உள்ளதாகவும் கூறினார்.

கவன ஈர்ப்போ, சர்ச்சையை கிளப்புவதோ தனது எண்ணமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகளை எடுத்துக்கூறுவதே நோக்கம் என்பதே இந்த விழாவில் பா.ரஞ்சித் ஆற்றிய உரையின் சாராம்சமாக இருந்தது.Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...