Home /News /entertainment /

‘ஜாலியா ஒரு காதல் கதை…’ : பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பட கேரக்டர்கள் அறிமுகம்…

‘ஜாலியா ஒரு காதல் கதை…’ : பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பட கேரக்டர்கள் அறிமுகம்…

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் போஸ்டர்

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் போஸ்டர்

Natchathiram Nagargiradhu : படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர்களின் கேரக்டர்கள் டீசரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

    பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் கேரக்டர்கள் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களை தவிர்த்து ஹரிகிருஷ்ணன், வினோத், சுபத்ரா, ராபர்ட், சபீர் உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த படத்தின் போஸ்டர்கள் வானவில்லை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.

    Gargi Movie Review: எப்படி இருக்கிறது சாய் பல்லவியின் கார்கி படம்?

    LGBTQ உறவுகள் குறித்து இந்த திரைப்படம் வலுவாக பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரை பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.



    படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர்களின் கேரக்டர்கள் டீசரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

    டீசரைப்பார்க்க...



    மிக குறுகிய காலத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் அவரது 61வது படத்தை பா. ரஞ்சித் இயக்க உள்ளார்.

    5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம் - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

    விளையாட்டு மற்றும் மைதானங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Pa. ranjith

    அடுத்த செய்தி