• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sarpatta Parambarai: ஜூலை 22-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை!

Sarpatta Parambarai: ஜூலை 22-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை!

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் சார்பட்டா பரம்பரை படத்தை தயாரித்திருக்கிறது.

  • Share this:
    பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    கபாலி, காலா படங்களுக்குப் பிறகு ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த இரு குத்துச் சண்டை அணிகளைப் பற்றிய திரைப்படம் இது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் வழிவழியாக குத்துச் சண்டையில் போட்டியிடுகின்றன. இதன் பின்னணில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸை தொடர்ந்து வட சென்னையை அடிப்படையாகக் கொண்டப்படம் என்பதால், சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இதில் ஆர்யா பாக்ஸிங் வீரராக நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன். ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் சார்பட்டா பரம்பரை படத்தை தயாரித்திருக்கிறது.

    ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: