முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராகவா லாரன்ஸ் - வடிவேலுவின் சந்திரமுகி 2 பூஜையுடன் தொடக்கம்!

ராகவா லாரன்ஸ் - வடிவேலுவின் சந்திரமுகி 2 பூஜையுடன் தொடக்கம்!

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் பி.வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2-வில், ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் பி வாசு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கியது.

படத்தின் பூஜை படங்களை லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டது. அதில் இயக்குநர் பி.வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரவி மரியா, ராதிகா சரத்குமார் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

’V’ என்ற முதல் எழுத்தில் வெளியாகவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ். எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

First published:

Tags: Actor Raghava lawrence, Actor Vadivelu, Radhika sarathkumar