அதிகாலையில் ரசிகர்களை சந்திக்க முடிவெடுத்த ஓவியா... 90 ML படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு 'A சான்றிதழ் வழங்கியுள்ளது.

Web Desk | news18
Updated: February 12, 2019, 9:10 PM IST
அதிகாலையில் ரசிகர்களை சந்திக்க முடிவெடுத்த ஓவியா...  90 ML படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு 'A சான்றிதழ் வழங்கியுள்ளது.
Web Desk | news18
Updated: February 12, 2019, 9:10 PM IST
ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடிகையாக நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்து ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நீண்ட இடைவெளி கொடுத்த ஓவியா சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியிருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து ஓவியா நடித்திருக்கும் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்தநிலையில் 90 எம்.எல் படம் பிப்ரவரி 22-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். சிம்பு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு 'A சான்றிதழ் வழங்கியுள்ளது.





படத்தின் ரிலீஸ் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஓவியா, பிப்ரவரி 22-ம் தேதி 90 எம்.எல் படத்தின் முதல்நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

 

அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்களும் கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு” என்று கூறியிருந்தார். ட்ரெய்லருக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து பதிலளித்த ஓவியா, “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

காதல் அழியாது... கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் அஜித் - வீடியோ

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626