தீவிர ரசிகையின் மரண செய்தி கேட்டு துடித்துப் போன ஓவியா

தனது ரசிகை மரணமடைந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தாரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தீவிர ரசிகையின் மரண செய்தி கேட்டு துடித்துப் போன ஓவியா
நடிகை ஓவியா
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 1:57 PM IST
  • Share this:
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அடுத்த நொடி நினைவுக்கு வருவது ஓவியா தான். திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த பெயரை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது வெளிப்படையான நடவடிக்கைகளால் அனைவரது மனதையும் கவர்ந்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ஆர்மி பக்கத்தை உருவாக்கினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘களவாணி 2’, ‘90 எம்.எல்’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கிருக்கும் வரவேற்பு குறையவில்லை. ரசிகர்களைப் போலவே ஓவியாவும் தனது ரசிகர்கள் மீது அதிக மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஓவியா ஆர்மி பக்கத்தின் அட்மினாகவும், தீவிர ரசிகையாகவும் இருந்த சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணமடைந்தார். இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது ஓவியாவை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்று சான்வி ஆசைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் அவர் மரணமடைந்துவிட்டதாக ஓவியா ஆர்மி பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டைக் கவனித்த நடிகை ஓவியா, சான்வியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, அவரது பெற்றோரை தொடர்பு கொள்ள தனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து ஓவியாவுக்கு உயிரிழந்த ரசிகை சான்வி குடும்பத்தாரின் தொடர்பு எண்ணை ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார். இதையடுத்து விரைவில் தனது ரசிகையின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஓவியா ஆறுதல் தெரிவிப்பார் என தெரிகிறது.
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading