Home » News » Entertainment » CINEMA OVIYA TWEET ABOUT BIGG BOSS TAMIL VJR

டி.ஆர்.பி-க்காக போட்டியாளர்களை சித்ரவதை செய்யாமல் இருக்க வேண்டும் - பிக்பாஸ் குறித்து ஓவியா சர்ச்சை கருத்து

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஒவியா ட்விட்டர் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டி.ஆர்.பி-க்காக போட்டியாளர்களை சித்ரவதை செய்யாமல் இருக்க வேண்டும் - பிக்பாஸ் குறித்து ஓவியா சர்ச்சை கருத்து
நடிகை ஓவியா
  • Share this:
இந்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் தொலைக்காட்சி கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்ப தொடங்கியது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

முதல் சீசனில் சிநேகன், ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சுஜா வரூணி, வையாபுரி, காஜல் பசுபதி, ரைஷா வில்சன், காயத்ரி ரகுராம், சக்தி, ஜூலி, ஓவியா, நமீதா, ஹார்தி, கஞ்சா கருப்பு, பரணி மற்றும் அனுயா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

பிக்பாஸ் முதல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழில் இந்த நிகழ்ச்சி புதுமையாக ரசிகர்களிடையே பெறும் வரவேற்பு கிடைத்தது. இந்த சீசனில் ரசிகர்களின் மொத்த வரவேற்பையும் பெற்றவர் நடிகை ஓவியா. ஓவியா ஆர்மி என்று அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை ஒவியாவிற்கு மக்களிடையே மிகவும் பிரபலமானார்.


இந்நிலையில் பிக்பாஸ் குறித்து அவர் ட்விட்டரில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யதால் அதை ஏற்பீர்களா?அல்லது எதிர்க்கீறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஒருவர் தடை செய்ய வேண்டும் என்று கருத்து பதிவிட்டிருந்தார்.





அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஓவியா, “அவர்கள் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்றுள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading