நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தில் தான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார்.
அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இணையத்தில் உருவாக்கியவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைத்துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. இந்நிலையில் ஓவியாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தில் தான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார்.
இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24-ந் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.