பிரபல நடிகைக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கைது வாரண்ட்...!

சபா காமர்

சபா பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொடர்கள், சினிமாக்களில் நடித்தவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியில் வெளியான இந்தி மீடியம் உள்பட பல படங்களில் நடித்தவர் சபா காமர். இவருக்கு பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றம்  கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த வரும் நடிகை சபாவும், நடிகர் பிலால் சயீத்தும் லாகூர் ஓல்டு சிட்டியில் அமைந்துள்ள பழமையான மசூதியில் ஒரு வீடியோ நடனத்தை படமாக்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மசூதியின் புனிதத்தை இவர்கள் கெடுத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர். சபாவுக்கும் சயீத்துக்கும் கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இருவரும் தங்கள் செயலுக்காக மன்னிப்பு கேட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், லாகூர் நீதிமன்றம் இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஜாமினில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட் என்பதால் இருவருக்கும் இப்போதைக்குப் பிரச்சனையில்லை

Also read... கோட்டா நீலிமாவின் நாவலை தெலுங்கில் படமாக்கும் வெற்றிமாறன்?

சபா பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொடர்கள், சினிமாக்களில் நடித்தவர். 2017 இல் இந்தி மீடியம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இர்பான் கான் நடித்திருந்த இந்தப் படம் உலக அளவில் கவனம் பெற்றது. ஆனால், அரசியல் பிரச்சனையால் சபாவுக்கு தொடர்ச்சியாக இந்தியில் நடிக்க வாய்ப்பு அமையாமல் போனது. இப்போது கம்பக்த் என்ற பாகிஸ்தானிய காமெடிப் படத்தில் நடித்து வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: