ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடி அப்டேட் : நவம்பர் மாதம் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட்…

ஓடிடி அப்டேட் : நவம்பர் மாதம் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட்…

நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகும் படங்கள் - வெப்சீரிஸ்கள்

நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகும் படங்கள் - வெப்சீரிஸ்கள்

நவம்பர் மாதம் நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் என்னென்ன என்பது குறித்து இந்தபதிவில் பார்க்கலாம்…

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நவம்பர் மாதம் நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் என்னென்ன என்பது குறித்து இந்தபதிவில் பார்க்கலாம்…

  Enola Holmes 2 - எனோலா ஹோம்ஸ் 2 

  துப்பறியும் ஜானரில் வெளிவந்த சூப்பர் சீரிஸ். துப்பறிவாளன் ஷெர்லாக் ஹோம்ஸின் சகோதரிதான் இந்த எனோலா. காணாமல் போன சிறுமி பற்றி துப்பு துலக்கும் எனோலாவுக்கு, தடயங்கள் கிடைக்கவில்லை. பின்னர் அவர் தனது நண்பர்கள், மற்றும் ப்ரதர் ஹோம்ஸின் உதவியை நாடுகிறார். நவம்பர் 4 ஆம் தேதி இந்த புதிய சீரிஸ் நெட் ஃப்ளிக்ஸில்…

  மோனிகா மை டார்லிங்

  – ராஜ்குமார் ராவ், ராதிகா ஆப்தே, ஹுமா குரேஷி நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவான படம் நவம்பர் 11-ஆம் தேதி ரிலீஸாகிறது.

  The Crown: Season 5 – தி க்ரவுன் சீசன் 5

  இங்கிலாந்து இளவரசி டயானா வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸ். டயானா – சார்லஸ் மற்றும் ஊடகங்களின் தலையீட்டை மையப்படுத்தி இந்த சீசன் அமைந்துள்ளதாக தகவல். நவம்பர் 9ஆம் தேதி முதல் இந்த தொடரை பார்க்கலாம்.

  Elite Season 6 – எலைட் சீசன் 6

  டீன் ஏஜ் இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்ட்ரஸ்டிங்கான சீரிஸ். ஆபத்தான சாகசங்களை செய்யும் இளைஞர்களுக்கு பிரத்யேக பள்ளி நடத்தப்படுகிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் இந்த சீசன். நவம்பர் 18 முதல் இதனை பார்க்கலாம்.

  Falling for Christmas – ஃபாலிங் ஃபார் கிறிஸ்மஸ்

  பனிச்சறுக்கு விபத்தில் கதாநாயகி லின்சே லோகனுக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டு விடுகிறது. இதையடுத்து, அவரது மகளின் பராமரிப்பில் இருக்கும் லின்சேவை சுற்றி நடக்கும் சுவாரசிய சம்பவங்கள்தான் இந்தப் படம்.

  நவம்பர் 10-ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Netflix