Home /News /entertainment /

கார்த்தியின் சர்தார் ஓடிடி உரிமைக்கு இத்தனை கோடிகளா?

கார்த்தியின் சர்தார் ஓடிடி உரிமைக்கு இத்தனை கோடிகளா?

கார்த்தி சர்தார்

கார்த்தி சர்தார்

கார்த்தியின்  திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் திரையரங்கு வெளியீட்டு பிந்தைய ஓடிடி உரிமைக்கு இத்தனை அதிக கோடிகளுக்கு விலை போனது தயாரிப்பு தரப்புக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வரும் சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை ஆகா தமிழ் ஓடிடி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் கார்த்தி நடித்தார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள். ஒன்று இளம் போலீஸ் அதிகாரி வேடம். இன்னொன்று வயதான வேடம். இந்தப் படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, விருமன்  படத்திற்கு கால்ஷீட் கொடுத்தார் கார்த்தி. அவரது அண்ணன் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த விருமன் படத்தை முத்தையா இயக்கினார்.

இதையும் படிங்க.. அஜித்தின் நான் கடவுளும், உடல் எடை குறைப்பும்!

அந்தப் படம் முடிவடைந்த நிலையில் மீண்டும் சர்தார் படத்துக்கு  திரும்பினார்.  படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் இதன் திரையரங்க வெளியீட்டுக்கு பிறகான ஓடிடி உரிமையை ஆகா தமிழ் ஓடிடி தளம்  வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 20 கோடிக்கு இந்த உரிமையை அவர்கள் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கார்த்தியின்  திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் திரையரங்கு வெளியீட்டு பிந்தைய ஓடிடி உரிமைக்கு இத்தனை அதிக கோடிகளுக்கு விலை போனது தயாரிப்பு தரப்புக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படிங்க.. cook with comali : பரத் மீது செம்ம கடுப்பில் போட்டியாளர்கள்.. அப்படி என்ன செய்தார்?

சர்தாரில் ரஜிஷா விஜயன், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.  ஸ்பை த்ரில்லராக சர்தாரை எடுத்து வருகிறார் பிஎஸ் மித்ரன்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

-
Published by:Sreeja
First published:

Tags: Actor Karthi, Kollywood, OTT Release

அடுத்த செய்தி