ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்… லிஸ்ட் இதோ

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்… லிஸ்ட் இதோ

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்

ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளிவரக்கூடிய சூப்பர்ஹிட் படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்…

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1, Cello Show – செல்லோ ஷோ

  குஜராத் மொழியில் உருவான படம். ஆஸ்கருக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது இந்த செல்லோ ஷோ. சர்வதேச திரைப்பட திருவிழாக்களிலும் பாராட்டைப் பெற்ற படம். நெட்ஃப்ளிக்ஸில் 25-ஆம்தேதி வெள்ளியன்று வெளியாகிறது.

  2, Wednesday – வெனஸ்டே

  நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சீரிஸ்களில் இதுவும் ஒன்று.ஆடம்ஸ் குடும்பத்தை சேர்ந்த வெனஸ்டே ஆடம்ஸ் என்ற சிறுமியை சுற்றி நிகழும் சம்பவங்கள்தான் இந்த காமெடி சீரிஸ்ன் கதை.

  நெட் ஃப்ளிக்ஸ் 23ஆம் தேதி புதன்கிழமை வெளியாகிறது.

  3. 1899

  த்ரில்லர் அட்வெஞ்சர் சீரிஸ்களை பார்ப்பவர்களுக்கு இந்த சீரிஸ் மிகவும் பிடிக்கும். நெட் ஃப்ளிக்ஸில் இந்தப் படம் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடலை கடக்கும் கப்பல் விபத்தில் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து கப்பலும் பயணிகளும் எப்படி மீண்டார்கள் என்பதுதான் இந்த வெப் சீரிஸ்.

  நெட்ஃப்ளிக்ஸில் தற்போது இதனை பார்க்கலாம்.

  4. Christmas on Mistletoe Farm – கிறிஸ்மஸ் ஆன் மிஸ்லெடோ ஃபார்ம்

  சூப்பரான குடும்பக் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மனைவியை இழந்த தந்தை அவரது 5 குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாட பண்ணை வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை.

  நவம்பர் 23 புதன் கிழமை இந்தப் படம் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

  5. Meet Cute

  ஆந்தாலஜி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை நடிகர் நானி தயாரித்துள்ளார். மனதை உருகவைக்கும் 5 கதைகள் இந்த படத்தில் உள்ளன.

  சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 25 வெள்ளியன்று வெளியாகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: OTT Release