அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களுக்கு தணிக்கை வேண்டும் - கொடிபிடிக்கும் முதல்வர்

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களுக்கு தணிக்கை வேண்டும் - கொடிபிடிக்கும் முதல்வர்
மாதிரி படம்
  • Share this:
திரைப்படங்களில் மட்டுமே படம் வெளியான காலம் மாறி இன்றைய இணைய உலகில் டிஜிட்டல் தளங்களிலும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

தியேட்டரில் வெளியாகும் படைப்புகள் அரசின் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை அவசியமில்லை என்ற நிலையே உள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்களில் வெப்சீரிஸ் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கமுடியாத நிலை தற்போது நிலவுவதால் திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வன்முறையும், ஆபாசமும் அதிகமாக இருப்பதால் ஓ.டி.டி. எனப்படும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வலைதளங்களின் வீடியோக்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.


அதில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அவர் தணிக்கை சட்டத்தில் உள்ள பொதுப் பார்வையிடல் என்ற அம்சம் விரிவான விளக்கத்தை கொண்டிருக்காத நிலையில், இத்தகைய தனிப்பட்ட பார்வையிடல் பற்றிய திருத்தத்தை அதில் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

படிக்க: உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை - தீர்ப்பு குறித்து பா.ரஞ்சித் ரியாக்‌ஷன்

மேலும் ஓடிடி தளங்களில் இடம்பெறும் அநாகரிகமான வசனங்களும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் அதைப் பார்ப்பவர்களின் மனதில் பாதிப்பை உண்டாக்குவதாகவும் கடிதத்தில் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading